Wednesday 14 December 2011

அடக்கம் பற்றி வள்ளுவர்- கணக்காயன் (இ.சே.இராமன்)

பற்பலவாம் செல்வத்துள் நல்லடக்கம் மாண்புடைத்து

1. உற்றிட்டல் தேவரென ஏத்திடுவர் ஞாலத்தார்
    அற்றிருந்தால் மாத்துயரே அன்னவர்க்க்கு எய்திடுமே!

2. பெற்றமைந்தால் மாச்செல்வம் கொண்டவர்ரய் மன்னிடலாம்.

3. மற்றவரை நல்லோர்கள் மேன்மையால் மேல்வைப்பர்.

4.தோற்றத்தில் இப்பண்பால் மாண்மலையும் குன்றிவிடும்!

5. வற்றாத செல்வர்க்கும் ஈதமைதல் மாச்செல்வம்!

6. சாற்றுகின்ற ஐந்துறுப்பும் நன்றடக்கி வாழ்வோரே
     மாற்றமின்றி    எப்பிறப்பும் நற்காவல் பெற்றவரே!

7. நோற்றிருப்பீர் நாவடக்கம் ஒள்ளியராய் நிற்பீரே!

8. குற்றந்தான் தீச்சொற்கள் நன்றெல்லாம் தீய்த்துவிடும்.

9.நீற்றிருக்கும் தீ கூட இல்லதுவாம் உள்வடுவே!
  சாற்றுகின்ற வன்சொல்லால் ஆம்வடுவோ ஆறாதே!

10. சீற்றத்தை நேரடக்கி கற்றடங்கில் அன்னவரை
      ஆற்றமைக்கும் மாணறத்துத் தெய்வமதே! மன்னுகவே!
    

No comments:

Post a Comment